Tuesday, November 30, 2010

சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள்


சந்தேகம் என்பது வந்துவிட்டால் சந்தோஷம் என்பது போய்விடும் என்று ஒரு பழமொழி உள்ளது.
இது எந்த விஷயத்திற்கும் பொருந்தும். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

தனது துணைக்கு எதிர்பாலரிடம் இருந்து செல்பேசி அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும்.

உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள்.

நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம்.

இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இவர்களுடன் பேசி, தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.

அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும்.

இதற்காகத்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர்.

ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சந்தேகப் பிராணியை வளர்க்காதீர்கள். அது நம் சந்தோஷத்தை உணவாக விழுங்கிவிடும்.

No comments:

Post a Comment