கோபத்தில் கூட கெடுதல் செய்யாத அப்பா ....திட்டினாலும் நாம் அழும் பொது அழும் அம்மா .... சண்டை போட்டாலும் நம் நலம் விரும்பும் அண்ணா....கஷ்டத்திலும் தோள் கொடுக்கும் நண்பர்கள் .....உங்களுக்காக அழ இத்தனை உறவுகள் இருக்க ........உங்களை அழ வைக்கும் காதல் எதற்கு ........
Friday, December 10, 2010
சூறாவளியின் போது கிளிக் செய்யப்பட்ட மேகக் கூட்டங்கள்
படத்தைப் பார்த்தால் எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு அனைவருக்கும் தோன்றும். Independence Day திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போன்ற படங்கள் இவை. புயல் காற்று வீசும் போது எல்லோரும் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கி இருப்பது தான் வழக்கம்.
அந்த நேரத்தில் வானத்தில் ஏற்படும் மாற்றங்களை படம் பிடித்துள்ளார் பிரித்தானிய ஒளிப்படக்காரர் ஒருவர்.
இந்த மேகக் கூட்டங்கள் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டவை. மேற்கு க்ளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய புயல் தாக்கிய போது ஆகாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அழகாக படம் பிடித்துள்ளார்.
மொத்தம் 400 படங்களுக்கும் மேல் கிளிக் செய்துள்ளார். இயற்கையை நம் கண் முன்னே காட்டும் படங்களில் சில உங்கள் பார்வைக்கு. நான்கு வருடங்களாக சூறாவளியை படமெடுக்க கடும் முயற்சி செய்ததில் கடந்த வருடம் தான் வெற்றி கிட்டியுள்ளதாக கூறுகிறார் ஒளிப்படக்காரர். தற்போது இந்த படங்கள் இணையத்தில் பலராலும் ரசித்துப் பார்க்கப்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment